திமுக கொடுத்த சூப்பர் வாக்குறுதி! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!

Photo of author

By Sakthi

எதிர்வரும் தேர்தலில் எப்படியாவது ஆளுங்கட்சியான அதிமுகவை விழுத்தி நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எதிர்க்கட்சியான திமுக பல்வேறு நடவடிக்கைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறது.

பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத பிறக்கக் காரணமாக, எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதையாக பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு அள்ளி வீசி வருகின்றது. எதிர்கட்சியான திமுக அதில் ஒன்றுதான் மதுக்கடைகள் குறித்த வாக்குறுதி சென்ற தேர்தலில் மதுக்கடைகளை அகற்றுவோம் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அதற்கு முன்பாகவே பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருக்கக்கூடிய மதுக்கடைகளை அனைத்தையும் உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதோடு அதிமுகவும் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்து அதனை செயல்படுத்தியும் வருகின்றது.எதிர்வரும் ஆண்டுகளிலும் அந்த நடவடிக்கை தொடரும் என்று அதிமுக அரசு உறுதி அளித்து இருக்கிறது.

இந்த மதுவினால் தமிழகத்தில் எண்ணற்ற தாய்மார்கள் அனுபவிக்கும் துன்பங்கள் என்னவென்று சொல்லிமாலாது அந்த அளவிற்கு இந்த மது தமிழக மக்கள் அனைவரிடத்திலும் துன்பங்களை கொண்டு சேர்க்கின்றது.அப்படிப்பட்ட மதுவை தான் முழுமையாக தமிழகத்தில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் தற்போதைய அதிமுக அரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக தான் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதனை தற்போது வரை செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியான திமுகவோ சென்ற தேர்தலில் வாக்கு அரசியல் என்ற காரணத்திற்காக மதுக்கடைகளை மூடுவோம் என்று அறிவித்தது. ஆனால் தற்சமயம் நாங்கள் எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் நூறு ரூபாய்க்கு மது பாட்டில்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறது.இது தமிழக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மதுவினால் தமிழகத்தில் தாய்மார்கள் மட்டுமன்றி இளம் பெண்கள், பள்ளிக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தமிழக இளைஞர்களும் இந்த மதுவினால் தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆகவேதான் இந்த மதுவை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்ப காலம் முதலே தெரிவித்து வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தற்போது இருக்கக்கூடிய அதிமுக அரசும் இந்த மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக பின்பற்றி வருகிறது. இவ்வாறு மது என்ற அரக்கனை தமிழகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வரும் சமயத்தில் திமுக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் திமுக சார்பாக ஒரு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அதில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து அதற்க்கு அருகில் 110 ரூபாய் விலையில் மது பாட்டில்கள் வழங்கப்படும் வாக்களிப்பீர் உதயசூரியன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி சர்ச்சைக்கு உள்ளான ஒரு வாக்குறுதியை கொடுத்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வந்தால் மது கலாச்சாரம் தமிழகத்தில் பெருகிவிடும். அதன் காரணமாக, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். அரசியல் நோக்கர்களும் பத்திரிக்கையாளர்களும்.