விசிக வை மண்டியிட வைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்!! நெருக்கடியில் திருமா!!

DMK VSK: விசிக வை மறைமுகமாக தாக்க மேலிடத்தை திமுக நாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

லாட்ரி மார்டின் மீது முன்னதாகவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் இதுகுறித்து அவருக்க்கு சாதகமாகவே தீர்ப்பானது. இவ்வாறு இருக்கயில் இவரது மருகன் விடுதலை சிறுத்தை கட்சி பொதுசெயலாளராக உள்ள நிலையில் திமுக பெரும் அதிருப்த்தியில் உள்ளது. ஏனென்றால், விசிக-வை திமுகவிற்கு எதிராக கிளப்பி விடுவதே ஆதவ் என என நம்புகின்றனர். குறிப்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என போராட்டம் நடத்த திருமாவை தூண்டியதும் இவர் தானாம்.

அதுமட்டுமின்றி தவெக விஜய் மாநாட்டிற்கு உதவும் வகையில் பணம் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையெல்லாம் வைத்து தான் இவர்கள் மீது ரிவெஞ் எடுக்க வேண்டுமென திமுக திட்டம் தீட்டியுள்ளது. அதனுடைய வெளிப்பாடு தான் இவர்கள் மீது ED ரெய்டு சென்றுள்ளது. சமீபகாலமக ஆளும் கட்சியானது மத்திய அரசுடன் பரஸ்பர உறவாடி வருகிறது. இதன் மூலம் இவர்கள் மீது ரெய்டு செல்ல வேண்டுமெனவும் மறைமுகமாக கேட்டுள்ளது.

திமுக-வின் பேச்சைக் கேட்டு தான் தற்பொழுது லாட்ரி மார்ட்டின் மற்றும் அவரது மருமகனான விசிக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். கருப்புப்பணம் பதுக்கி இருப்பது குறித்து இந்த சோதனை என தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சி இவ்வாறு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சியானது இதிலிருந்து வெளியேற கட்டாயம் உதவி கேட்கும்.

அச்சமயத்தில் நமது அரசியல் நகர்வைத் நகர்த்தலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். இவர்கள் தவெக வில் இணைய வேண்டும் என நினைக்கும் பட்சத்தில் தற்பொழுது இந்த ரெய்டானது சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி திமுக தங்களது வளையில் விசிக-வை கொண்டு வர வேண்டும் என நினைக்கும் எண்ணத்தால் மேற்கொண்டு விரிசல் தான் ஏற்படும்.