“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது!

Photo of author

By Rupa

“அடுத்து ஆட்சிக்கு வரப்போரவாங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ” பறக்கும் படையினரைய மிரட்டிய திமுக! திமுகவின் அராஜகம் தொடங்கியது!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை பெற பல அறிக்கைகள் கூறி வருகின்றனர்.அதனைத்தொடர்ந்து மக்களுக்கு பலவகைகளில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர்.மேலும் அதிமுகவில் நேற்று வீட்டிற்கே வாக்களர்களை வரவழைத்து லஞ்சத்தை கொடுத்த வீடியோ கையும் களவுமாக சிக்கியது.அந்த அரசு தான் அப்படி இருக்கிறது என்றால் திமுக ரௌடிசம் பன்னும் அரசாக உள்ளது.

ஒவ்வொரு ஆட்சி பற்றியும் மக்கள் வெளியே பேசி தான் வருகின்றனர்.அதில் எந்த ஆட்சியும் ஒழுங்கில்லை என்பது தான் முக்கிய வார்த்தையாக உள்ளது.அதில் திமுக ஆட்சி ரௌடிசம் செய்யும் ஆட்சி தான் என அனைத்தின் தரப்பிலிருந்தும் கூறப்படுகிறது.அந்தவகையில் சில தினங்கள் முன் சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற ஒரு வாகனம் நடுவில் செல்லும் ஆட்களையே தூக்கி போடும் வேகத்தில் சென்றுள்ளது.அப்போது அதனை கவனித்த பறக்கும் படையினர் அந்த காரை சேஸ் செய்து சினிமா பட பாணியில் விரைந்து பிடித்தனர்.

பிறகு பறக்கும் படையினர் அந்த காரை சோதனையிட்டனர் அப்போது ஏதும் தென்படவில்லை.அதன்பின் அந்த காரை புறப்பட சொல்லி அனுப்பிவிட்டனர்.பிறகு அந்த காரின் உட்காரும் சீட்டானது சற்று உயர்ந்து காணப்பட்டது.அப்போது ஒர் அதிகாரி சந்தேகமடைந்து மீண்டும் அந்த காரை நிறுத்தினார்.அந்த சீட்டை கிழிக்கும் படி மற்ற அதிகாரியிடம் ஆணையிட்டார்.அதற்கு அந்த காரின் உரிமையாளரும் ஒப்புக்கொள்ளவில்லை.வாக்குவாதம் நீளவே அந்த காரின் சீட் கவரை கிழித்து பார்த்தனர்.அப்போது அதில் பளபளக்கும் புதிய கட்டு கட்டான  பணங்கள் இருந்தது.அதன்பின் அந்த பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

பணத்தை கைப்பற்றிய அடுத்த ஓரிரு நிமிடத்திற்குள் திமுக பிரமுகரிடமிருந்து அழைப்பு வந்தது அதில் அவர் கூறியது,”நம்ப பணம் தான் விட்டு விடு” என எடுத்த உடனே பறக்கும் படையின் கண்காணிப்பாளரை மிரட்டுயுள்ளார்.அப்படி மிரட்டியும் அந்த கண்காணிப்பாளர் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.அதனையடுத்து அடுத்த அழைப்பாக உயர் வருவாய்துறை அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.அதில் அவர் கூறியது,”அடுத்து ஆட்சிக்கு வரப்போரவங்ககிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோங்க” என கூறியுள்ளார்.

உயர் அதிகாரியின் பேச்சை மீற முடியாமல் அந்த பறக்கும்படை கண்காணிப்பாளர்கள் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டனர்.ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே திமுக அரசு இவ்வாறு மிரட்டுகிறார்கள்.அதன்பின் ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள்.வருவதற்கு முன்னதாகவே இத்தனை அராஜகமா ?என பறக்கும் படை அதிகாரிகள் கோவமடைந்துள்ளனர்.