எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!!

எங்களை கண்டு திமுக அஞ்சுகிறது.. அதன் வெளிபாடு தான் இந்த அதிகார அத்துமீறல் – பாஜக அண்ணாமலை கண்டனம்!!

சென்னையில் அண்ணாமலை வசிக்கும் வீட்டின் அருகே 50 அடி நீளம் கொண்ட பாஜக கொடியானது வைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்ற முற்பட்ட பொழுது வரவழைக்கப்பட்ட ஜே சி பி உள்ளிட்டவைகளின் கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருந்தவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது. மேற்கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்தவர்களை போலீசார்  கைது செய்த சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பல்வேறு கட்சிகளின் கொடிகள் நிறுவப்பட்டிருக்கும் இடத்தில் எங்கள் கொடியை மட்டும் அகற்றுவது ஏன் என கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி வரும் 100 நாட்களுக்குள் அனைத்து இடங்களிலும் பத்தாயிரம் பாஜக கொடி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதனையொட்டி இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக கொடியானது  நிறுவும் பணியானது தொடங்கப்பட்டது.அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்தில் பாஜக கட்சி கொடியை அமைக்க முற்பட்டதையடுத்து மீண்டும் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது.அரசின் விதிமுறைப்படி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மேலும் காவல்துறையிடம் அனுமதி பெற்றும் கொடியை நிறுவ வேண்டும்.

ஆனால் இவர்கள் எந்த ஒரு அணைமதியையும் பெறாமல் நிறுவ முற்பட்டதால் கொடியை அகற்றுவதாக கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி தமிழக பாஜக அண்ணாமலையின் 10000 கொடி கம்பங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையடுத்து சென்னையில் கொடி கம்பங்கள் நட அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இதர மாவட்டங்களில் கொடி கம்பங்கள் நடும் பணி தொடங்கிய பொழுது அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் கோவையில் கொடிக்கம்பம் வைக்க முற்பட்ட பொழுது அம் மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அண்ணாமலை தனது விட்டார் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற @BJP4Tamilnadu தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் @BJP4Tamilnadu பின்வாங்கப் போவதில்லை. 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்.