ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!
சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விபத்து நடந்த பொழுதே இதற்கு முக்கிய காரணம் திமுக தான் என பலரது விமர்சனமாக இருந்தது. சமீப கலாமாக சமூக ஊடகங்களில் திமுக குறித்து பல நிதர்சனமான உண்மைகளை சவுக்கு கூறி வந்தார். இதனை எதிர்கொள்ள முடியாமல் திமுக இவரை கைது செய்ய இவ்வாறான திட்டம் தீட்டியதாக பல தகவல்கள் வெளிவந்தது.
பத்திரிக்கையாளர்களின் சுதந்திர உரிமை பற்றி பேசும் திமுக அவர்களைப் பற்றி பேசும் வாய்களை கட்டவே இவ்வாறு செய்கிறது. குறிப்பாக திமுக கட்சியில் பல உறுப்பினர்கள் பெண்களை அவதூறாக பேசிய பொழுது சிறிதளவு கூட தலைவர் கண்டுகொள்ளவில்லை. பொது மன்னிப்பு கேட்டவுடன் தலைவரும் அப்படியே விட்டுவிட்டார். ஆனால் தற்பொழுது சவுக்கு சங்கர் பேசியதை பெரும் பரபரப்பாக்கி வெளியே வர முடியாத அளவிற்கு வழக்குகளை குவித்துள்ளனர்.
யாரையெல்லாம் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையோ அவர்களை சிறைக்கு அனுப்பி விடுகின்றனர். தற்பொழுது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கீதா இவர் மீது புகார் அளித்ததையொட்டி இவர் மீது ஆறாவது வழக்கு பதிந்துள்ளது.இதனைத்தொடர்ந்து இவர் மீது கஞ்சா வழக்கு,பெண் வன்கொடுமை வழக்கு போன்றவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.