எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டமானது நேற்று சென்னையில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறினாலும் அதில் உள்ள கிரீமிலேயர் முறையை பலரும் எதிர்கின்றனர்.
அந்த வகையில் திருமாவளவன் கூறியதாவது, ஒரு பொழுதும் மாநில அரசானது ஒரு தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளாது வரவும் விடாது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில அரசுக்கு இருக்கும் தொடர்பு. திமுக அரசின் மீது நம்பிக்கை உள்ளது ஆனால் அது நிலையானது இல்லை. மாநில அரசுதான் நிலையானது. கட்சிகள் என்பது வரும் போகும் அது முற்றிலும் வேறு. இதனால் ஒரு பொழுதும் தலித் முதலமைச்சராக முடியாது.
மேலும் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் கிரீமிலேயர் வரம்பை நீக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறினார். அதேபோல வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செயல்முறைக்கு வராததற்கு முக்கிய காரணம் அந்த குறிப்பிட்ட வகுப்பினர்குறிய தரவுகள் ஏதும் இல்லாததுதான். ஆனால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு என்று எண்ணுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு எங்களுக்கான சாதி வாரி கணக்கெடுப்பு இது இல்லை என்பதை அறிய வேண்டும்.
மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தலித் முதலமைச்சராக வருவதை மாநில அரசு ஏற்காது என கூறினார். திமுகவை மறைமுகமாக சாடி பேசிவிட்டு தோழமைக் கட்சி என திமுகவை விட்டுக் கொடுக்காமல் ஒப்பேத்தி பேசுகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.