நான் பேசியதை திரித்து பொய் பிரச்சாரம் செய்கிறது திமுக!! கடும் ஆவேசம் கஸ்தூரி!!

Photo of author

By Vinoth

நடிகை கஸ்தூரி செய்தியாளர்களுக்கு சென்னை போயஸ் கார்டனில் பேட்டி அளித்தார். அதில் அவர் நான் தெலுங்கு மக்களை இழிவாக பேசியதை திமுக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. நான் என்ன பேசினேன் அவர்கள் நான் பேசியதை திரித்து பொய் பிரசாரம் செய்கின்றனர். அதில் நான் எதும் தெலுங்கு மக்களை தவறாக பேசவில்லை மேலும் இந்த விடியா திமுக அரசு 100 சதவிதம் பொய்ப்பிரசாரம் செய்துவருகிறது.

அதில் தெலுங்கு மக்கள், தெலுங்கு இனம் என்ற சொல்லை நான் கூறவில்லை. நான் தெலுங்கு மக்களை மிகவும் மதிப்பவள் அதுமட்டும் இல்லாமல் எனது பிள்ளைகளை ன தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியையும் படிக்கின்றனர். நான் தமிழச்சி என்றாலும், தெலுங்கு மொழியையும் மதிப்பவள். ஆனால் எனது நெருங்கிய நண்பர்கள் என்னை தவறாக பேசிவருகின்றனர்.

மேலும் மற்ற சமூகங்களையும், பிராமணர்களையும் இழிவு படுத்தியபோது மக்கள் புரட்சியாக எடுத்து கொண்டனர். அதனை வந்தேறி என பிராமண சமுகத்தை கூறுவார்கள் தமிழர்களா என கேள்வி எழுப்பினேன். மேலும் நான் பொய்களுக்கு அச்சப்படுபவர் இல்லை என்று அவர் கூறினார்.