நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் கட்சி திமுக தான்! ஆட்டம் கொள்ள போகும் பாஜக!
திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி பெற்றிருந்தாலும்,சிறப்புமிக்கதாக நடத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நாடளுமன்றத்திலேயே பெரும் கட்சியாக வலுப்பெற்று வருகிறது.அந்தவகையில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் முகமது ஜான் மரணம் அடைந்தார்.அவர் இடத்திற்கு திமுக உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லா போட்டியின்றி நியமிக்கப்பட்டார்.மேலும் மாநிலங்களை உறுப்பினராக திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, பி.வில்சன், எம்.சண்முகம் மற்றும், புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் திமுக சார்பில் உள்ளனர்.இவர்களது பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.
அதனையடுத்து அதிமுக உறுப்பினர்களான கே.பி.முனுசாமி,ஆர் வைத்தியலிங்கம் ஆகியோர் தாங்கள் பதவிலிருந்து விளங்குவதாக ராஜினாமா கொடுத்தனர்.அந்த ராஜினாமா இடங்களுக்கு டாக்டர் கனிமொழி,கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து இவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 27 ம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் அறிவிப்பதாக வெளியிட்டுள்ளனர்.இதனால் மாநிலங்களவையில் திமுகவின் மாநிலங்களை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.அந்தவகையில் மாநிலங்களவையில் திமுக-வின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி மக்களவையில் 24 எம்.பி.க்கள் ஆக உள்ளனர்.இதனால் நாடாளுமன்றத்தில் திமுகவின் எண்ணிக்கை 34 உயர்ந்துள்ளது.
தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இரு பெரும் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் அடுத்து திமுக பெரும் கட்சியாக வளம் வர உள்ளது.அந்த பட்டியலில் முதல் இடத்தில் பாஜகவும்,அதாவது,மக்களவையில் 301 ஆகவும்,மாநிலங்களவையில் 94 ஆகவும் மேலும் 395 எம்பிகளுடன் உள்ளது.அதனையடுத்து காங்கிரஸ் 2 வது இடத்தில் உள்ளது.அந்தவகையில் மக்களவையில் 52 ஆகவும்,மாநிலங்களவையில் 33 ஆகவும்,85 எம்பிக்களாகவும் வளம் வருகிறது.
அதனையடுத்து மக்களவையில் 22 ஆகவும்,மாநிலங்களவையில் 12 ஆகவும்,34 எம்.பி.களாக திரினாமூல் காங்கிரஸ் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.இதற்கு போட்டியாக திமுக அரசானது மக்களவையில் 24 ஆகவும் மாநிலங்களவையில் 10 எனவும் அதனையடுத்து 10 எம்.பி.க்கள் என்று மூன்றாவது இடத்திற்கு திரினாமுல் காங்கிரசுக்கு இணையாக உள்ளது.விரைவில் மூன்றாவது இடத்தை கடந்து பாஜக-க்கு இணையாக முதல் இடத்தில் மாபெரும் கட்சியாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.