
ADMK DMK: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக அதிமுகவிற்கு போட்டியாக தற்பொழுது தவெக இறங்கியுள்ளது. இதனால் வாக்கு சதவீதமானது பெருமளவில் மாறுபடும், அரசியலுக்கு புதிய கட்சி என்றாலும் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதே சமயம் தற்போது வரை திமுக அதிமுக தவெக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை.
அதிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் கூட்டணி ஆட்சி முறைதான் எனக் கூறி வருகின்றனர். அதற்கு எடப்பாடி முழு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என கூறிய எடப்பாடி தற்பொழுது சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் இவர்களுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனால் அதிமுகவின் கூட்டணியிலிருந்த எஸ்டிபிஐ கட்சி முதலில் விலகியது அனைவருக்கும் தெரிந்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவிரோத மசோதாவை தாக்கல் செய்த பாஜகவை முழுமையாக கண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜாவும் கட்சியிலிருந்து விலகி திமுக வில் இணைந்துவிட்டார். இதனால் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவருவது என்பது சந்தேகம்தான். அந்த வரிசையில் அடுத்தடுத்து பல தலைகள் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரிடமும் திமுக முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம். ஆனால் இவர் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கவில்லை, மேற்கொண்டு அதிமுக தான் முழுமூச்சு என்று உள்ளாராம். இது ரீதியான தகவலை ஜெயக்குமாரின் நம்பிக்கைகுறிய நபர் வெளியிட்டுள்ளதால் சற்று அதிருப்தியில் உள்ளார்.
கட்சிக் கூட்டணி குறித்தும், ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தற்போது ஜெயக்குமார் திமுகவில் இணைய போகிறாரா என்ற செய்தி மேலும் குளறுபடியை ஏற்படுத்தும் என்கின்றனர்.