இதெல்லாம் சரியே இல்லை.. திண்டுக்கல் தொகுதியால் டென்ஷனான ஆளும் கட்சி!! போட்ட திட்டமெல்லாம் பிளாப்!!
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பாக வேலுச்சாமி என்பவர் போட்டியிட்டார்.மற்ற தொகுதிகளை காட்டிலும் தமிழகத்திலே இவர் தான் அதிகப்படியான வாக்குகளையும் பெற்றார். பெரும்பாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் தேர்தலை அடுத்து இவரின் தலை அந்த தொகுதி பக்கமே தெரியவில்லை.மக்களுக்கு எம்பி என்பவர் இருப்பது அறியாமலே போனது.
இதனை மையப்படுத்தி திமுக மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதனை தவிர்க்கவே இந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினர்.அந்த வகையில் இம்முறை சிபிஎம் கட்சி சார்பாக மாநில குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளரான சச்சிதானந்தம் வேட்பாளராக இறக்கப்பட்டார்.இவரும் பரப்புரையில் தொகுதி தொகுதியாக சென்று வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது மக்களை ஒரு நாளும் கண்டுகொள்ளவில்லை.
கடந்த மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதிக்கு என்ன நேரிட்டதோ அதே தான் தற்பொழுதும் இவரின் மூலமும் நடைபெற்று வருவதாக குற்றம் சுமத்த ஆரம்பித்து விட்டனர்.நான்கு லட்சம் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அதற்கு உந்துகோலாக இவரின் பக்கம் இருந்த இரு அமைச்சர்களுக்கு மட்டும்தான் இவர் நேரடியாக சென்று நன்றியை தெரிவித்துள்ளார்.மக்களுக்கு வெறும் போஸ்டர் மூலம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை கூறியுள்ளார்.
இது திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இம்முறையும் எம்பி யார் என்று தெரியாமல் இருந்துவிடும் என மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.மக்களையடுத்து கூட்டணி கட்சியான திமுகவும் சற்று அதிருப்தியில் தான் உள்ளது.சொந்த கட்சி நிர்வாகியை இறக்கினால் தான் இவ்வாறான புகார்கள் வருகிறது என்று முற்றிலும் தவிர்த்து கூட்டணி கட்சியை நிற்க வைத்தால் அவர்களும் இப்படி தான் இருக்கின்றனர் என திமுக-வை சேர்ந்தவர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.
மேலும் அதிமுக மற்றும் இதர கட்சியினர் இவர் நன்றி செலுத்திய போஸ்டரை புகைப்படம் எடுத்தும் மேற்கொண்டு கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.