அவருக்கு நிகர் அவரேதான்! திருச்சியில் திமுகவின் முக்கிய நபரை புகழ்ந்த ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

விரைவில் தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தை செய்த அவர் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் திமுகவின் முதன்மை செயலாளருமான கே என் நேரு இந்த பிரச்சாரத்திற்காக மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகில் பிரச்சாரத்திற்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. எல்லா பகுதிகளில் இருந்தும் இன்றைய தினம் மக்கள் வந்து பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், திமுகவின் வேட்பாளர் கே என் நேரு அவர்களை வெகுவாகப் பாராட்டிப் பேசிய ஸ்டாலின் இதுதொடர்பாக பெரிய அளவில் பேச தேவையில்லை அவரிடம் எந்த ஒரு வேலையை கொடுத்தாலும் அதில் வல்லமையுடன் செயல்படுவது அவருடைய இயல்பு என்று தெரிவித்தார். கடந்த 7ஆம் தேதி திருச்சியில் ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள் என்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர் ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தி விட்டார். அமைச்சர் பதவியாக இருந்தாலும் சரி, கட்சி பணியாக இருந்தாலும் சரி, மிக சிறப்பாக செயல்படுபவர் அவருக்கு நிகர் அவர் மட்டும் தான் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற வையுங்கள் என்று தெரிவித்தார்.

அதேபோல திமுக எந்த ஒரு மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின். சென்றமுறை ஆட்சிக்கு வந்த சமயத்தில் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஒரு வாக்குறுதியை கூட அதிமுக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.அதேபோல அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை அவர்களின் பதவியை காப்பாற்றிக் கொள்வது வாடிக்கையாக வைத்து அதற்காக மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள் என்று ஆளும் கட்சியின் மீது விமர்சனம் செய்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.அதோடு அந்தக் கட்சிக்குள் கோஷ்டி மோதல் நடந்து கொண்டிருக்கிறது அதன் காரணமாக, அதனை சரி செய்வதற்கு முதல்வருக்கு நேரம் போதவில்லை அதனாலேயே மக்களைப் பற்றி சிந்திக்க மறந்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.