திருநெல்வேலியில் கொல்லப்பட்ட திமுக பிரமுகர்!

Photo of author

By Sakthi

முக்கூடலை சேர்ந்த செல்லத்துரை திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்திருக்கிறார் அவர் ஊருக்கு வெளியே இருக்கின்ற கோழிப்பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில், ஒரு சிலர் அவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அவரை வழிமறித்த அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அதன்பிறகு தப்பி சென்றுவிட்டது. இதன் காரணமாக பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக செல்லத்துரையின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் செல்லத்துரைக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவருடைய உறவினர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.