என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெண் மீது பொய் வழக்கு போட்ட காரணத்தினால்,அவமானம் தாங்க முடியாமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமார் என்பவர் உடன் கோகிலாவிற்கு நடைபாதை பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கோகிலா மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தினம்தோறும் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடும்படி கூறியுள்ளனர். இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மன உளைச்சலில் கோகிலா தற்கொலை செய்து கொண்டார். அவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என் சாவுக்கு திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் குமார் மற்றும் அவரது மனைவி தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியும் தற்போது வரை அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாஜக அம்மாவட்ட இளைஞரணி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்த குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லிய பின், அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது, டிவியில் பார்ப்பதை விட நேரில் வந்து இவர்களை சந்தித்தது மிகவும் நெஞ்சை உலுக்குகிறது. இவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை உறுதுணையாக இருந்து அனைத்தையும் செய்து தருமாறு தமிழ்நாட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக தெரிவித்தார்.
மேலும் லஞ்சத்திற்காக திமுக இளைஞரணி அமைப்பாளர் குமார் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு, இந்த பிரச்சனையில் காவல்துறை தலையிட்டது மிகவும் தவறானது. இதனால் ஒரு உயிர் போகும் நிலை வந்து விட்டது. தனது உயிர் போனதுக்கு இவர்கள்தான் காரணம் என்று ஆதாரங்கள் இருந்தும், இதுவரை காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இவ்வாறு கண்டு கொள்ளாமல் இருக்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்கொலையை தூண்டுதல், தற்கொலைக்கு காரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றாவளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவர்களின் நீதிக்கு முழு ஒத்துழைப்பையும் பாஜக தரும். மேலும் தற்கொலை செய்து கொண்ட கோகிலாவின் பிள்ளைகளின் படிப்பு செலவை பாஜவே ஏற்கும் என்று தெரிவித்தார். அதேபோல மக்களின் அன்றாட குடிமைப் பிரச்சனையை ஒரு உயிர் போகும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டது,இது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதை உறுதியாக்குகிறது என்றார்.