திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…

Photo of author

By Sakthi

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…

Sakthi

Updated on:

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது.

திமுக கட்சியின் தற்போதைய தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை அருகில் இருந்து தொடங்கும் இந்த அமைதிப் பேரணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநித் அவர்களின் நினைவிடத்தில் முடிவடையும் என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் காலை 8 மணிக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இந்த அமைதி பேரணி தொடங்கவுள்ளது.

முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கும் இந்த அமைதி பேரணியில் திமுக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு அவர்கள், மற்றும் பல அமைச்சர்கள் கலந்து கொண்டு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுடன் பயணிக்கவுள்ளனர்.