தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு

0
843
dmk leaders attacks the tea shop owner-news4 tamil online tamil news
dmk leaders attacks the tea shop owner-news4 tamil online tamil news

தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு

பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக டீ கடை ஊழியரை திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில் நேற்று மாலை திமுக கட்சியை சேர்ந்தவர்களான  கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் ஆகியோர் வடை, பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு முடித்த பிறகு இவர்களிடம் கடையில் வேலை செய்த ஊழியர், சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு தாங்கள் யார் என்று தெரியுமா என்று அவர்கள் தவறான வார்த்தைகளில் அவதூறாக பேசி ஊழியருடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் விடாமல், உன்னை என்ன செய்கிறோம் பார் என்று திமிராக மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, இரவு 10 மணிக்கு மேல் திமுகவை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி என்பவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோரை  உணவகத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, உணவகத்திற்கு உள்ளே புகுந்த திமுகவினர்  உரிமையாளர் தங்கபாண்டியனை தரக்குறைவாக பேசியதுடன், உணவகத்தில் வேலை செய்த ஊழியர் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அண்மையில், விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும்,ட்விட்டரில் “ஓசி பிரியாணி திமுக” என்ற பெயரில் தேசிய அளவில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து சாலையோர கடையில் பஜ்ஜி சாப்பிட்ட பிறகு பணம் கேட்டதற்காக கடை காரரை அடித்தது அதற்காக ட்விட்டரில் “ஓசி பஜ்ஜி திமுக” என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வந்தது,அடுத்து திருவண்ணாமலை செல்போன் கடை ஊழியரை தாக்கியது,பிறகு பெரம்பலூர் பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரை தாக்கியது என திமுகவினரின் அடாவடி அதிகமாகி கொண்டே வருகிறது.

திமுகவின் தலைமை பொறுப்பில் ஸ்டாலின் வந்த நாள் முதல் இது போன்ற அராஜகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது  மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கி வருகிறது.

Next articleவன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது