திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை பட்ஜெட் பற்றிய விவாதங்களும், அதன் பின் 29ம் முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை ஒவ்வொரு துறையில் மானிய கோரிக்கை தொடர்பாக விவாதங்களும் நடைபெறவுள்ளன.
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டுள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற கூட்ட தொடரில் உறுப்பினர்கள் யாரையும் ஒருமையில் பேசுவது, அல்லது மகளிர் உரிமை தொகை குறித்து எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு ஆக்ரோஷமாக பதில் கூறுவது கூடாது என்றும்,குறிப்பாக தன்னை பற்றி புகழ்ந்து பேசுவது, அமைச்சர்கள் பதிலளிக்கும் போது தேவையில்லாமல் எழுந்து நின்று சத்தம் போடுவது, கடுமையான வார்த்தை பேசுவது கூடாது.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்க்கும் கொடுக்கப்பட்ட பத்து திட்டங்கள் பற்றி மட்டுமே பேச வேண்டும், அமைச்சர்களுக்கு அழுத்தம் தரும் வகையில் கேள்விகளை கேட்க கூடாது, அதேபோல் அமைச்சர்களும் எதிர்கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும், உங்கள் பதில் சுருக்கமாகவும் தெளிவாகவும் புரியும்படியும் இருக்குமாறு தயார்படுத்தி வைக்க வேண்டும்.
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நீளமான பேச்சுகளை குறைத்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் தவிர்க்க வேண்டும், அதேபோல் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் கூறுவார்கள், இடையில் யாரும் பேசக்கூடாது அனைவரும் அமைதி காத்து திமுக ஆட்சிக்கு நற்பெயரை வாங்கி தர வேண்டும் என்ற பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.