முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கின்ற உடையான் பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சம்பந்தப்பட்ட பகுதியில் மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் இரண்டு டிராக்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு மேலும் 3 வாகனங்களில் ஓட்டுநர்களை கைது செய்து காவல்துறை விசாரணை செய்ததில் அதில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திமுக நிர்வாகி ஆரோக்கியசாமிக்கு சொந்தமான வாகனங்கள் என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து ஒரு சில மணி நேரத்திலேயே பிடிபட்ட வாகனங்கள் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திமுகவின் பொறுப்பாளர் ஆரோக்கியசாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக திமுகவின் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு ஒன்றில் திருச்சி மத்திய மாவட்டம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஆரோக்கியசாமி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.