மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!

Photo of author

By Sakthi

மற்றவர் உழைப்புகளுக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள்! பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!
மற்றவர்கள் உழைப்பிற்குத்தான் திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சித்துள்ளார்.
திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் “கலைஞர் கருணாநிதி அவர்களின் பேனா மையினால் தான் அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் ஆனார்” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் “நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்தவர்களின் உழைப்புக்கு திமுக கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிளார்கள். ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமில்லாமல் அவர்கள் பெற்று கொடுத்தது போல சொந்தம் கொண்டாடுகிறார்கள். இன்னொருவரின் குழந்தைக்கு ஏன் பெயர் வைக்கிறீர்கள். கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தில் எத்தனை பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆனார்கள். ஆ ராசா குடும்பத்தில் ஏன் யாரும் ஐபிஎஸ் ஐஏஎஸ் ஆகவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.