பிரென்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள்! இன்று முதல் தொடங்குகிறது!!

0
106
#image_title
பிரென்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள்! இன்று முதல் தொடங்குகிறது!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் அதாவது மே 28ம் தேதி முதல் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று(மே 28) தொடங்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நான்கு வகையான உயரிய கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் இரண்டாவதாக நடைபெறும் போட்டியாகும்.
இந்த போட்டிக்கான பரிசுத் தொகை மொத்தம் 439 கோடி ரூபாய் ஆகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு 20 கோடி ரூபாய்  கிடைக்கவுள்ளது. இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு 10 கோடி ரூபாய் கிடைக்கவுள்ளது.
இரட்டையர் போட்டியில் கோப்பையை வெற்றி பெறுபவர்களுக்கு 5 கால் கோடி ரூபாய் கிடைக்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று(மே 28) பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2, சோனி ஸ்போர்ட்ஸ் 5 ஆகிய சேனல்களில் பார்க்கலாம்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக முதல் முறையாக இன்று தொடங்கு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே போல இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னாள் சேம்பியன் ஆன்டி முர்ரே அவர்களும் இந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிமுள்ளார்.