நெருங்கிய நண்பர் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மகிழ்ச்சியின் உச்சத்தில் உதயநிதி!

Photo of author

By Sakthi

நெருங்கிய நண்பர் கொடுத்த மறக்க முடியாத பரிசு! மகிழ்ச்சியின் உச்சத்தில் உதயநிதி!

Sakthi

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைக்கு வெளியே போட்டியிட்டு இருந்தார். அவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், உதவி மிக மிக நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி அடைந்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில். ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. ஆகவே அவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். முதலில் சென்னையில் தன்னுடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் அலுவலகத்தில் வைப்பதற்காக பெரிய அளவிலான புகைப்படம் ஒன்றை அவர் பரிசாக வழங்கியதாக தெரிகிறது.

இந்த புகைப்படத்தில் மகன் தந்தைக்காற்றும்.உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் என்ற திருக்குறள் இடம் பெற்று இருக்கிறது. இந்த விவகாரம் குறித்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.