அண்ணாமலையை பாராட்டிய திமுக அமைச்சர்! கடுப்பில் முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

இன்றுகாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அந்த கேள்விகள் வருமாறு, சட்டசபையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் அதிமுக பங்கு வராதது தொடர்பாக கேள்வி எழுப்பிய சமயத்தில் துரைமுருகன் மாண்புமிகு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் ஆனால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல தமிழக சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் உங்களுடைய அரசியல் எதிரியாக வர்ணிக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருப்பது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பிய போது துரைமுருகன் அவர்கள் அந்த நல்ல உள்ளத்தை வரவேற்கிறோம் என்று தெரிவித்தார்.

மேகதாது அணை குறித்து யார் என்ன போராட்டம் செய்தாலும் நாங்கள் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடகத்தின் முதலமைச்சர் தெரிவித்திருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் தெரிவித்த துரைமுருகன் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், காவிரி நடுவர் மன்றத்தை மீறியும், அணை கட்டுவோம் என்று கர்நாடகத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பது வருத்தமாக இருக்கிறது. விரைவில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.

ஆட்சி பொறுப்பேற்ற 100 தினங்களில் நீங்கள் எந்த சாதனையும் செய்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய சமயத்தில், துரைமுருகன் அவர்கள் நாங்கள் பெரிய சாதனையாக நினைப்பது தற்சமயம் நோய்களை கட்டுப்படுத்துவது என்று தான் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு நோய் பரவலின் தொப்புள்கொடியை அறுக்க வேண்டும் என 24 மணி நேரமும் முயற்சி செய்து வருகின்றார் முதலமைச்சர். அதில் நாங்கள் சற்று வெற்றி பெற்று இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இதுவே எங்களுடைய பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது மற்ற சாதனை விட உயிர்காக்கும் சாதனைதான் உயர்வானது என்று தெரிவித்திருக்கின்றார் அமைச்சர் துரைமுருகன்.