இதற்கு மேல் ஒருவரை கொச்சையாக திட்டவே முடியாது.. உதவியாளரை டார் டாராக கிழித்தெடுத்த திமுக அமைச்சர்!! வைரலாகும் வீடியோ!!

DMK: திமுக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது உதவியாளரை ஒருமையில் சாடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திமுக அமைச்சர்கள் அவ்வபோது சர்ச்சைக்குள்ளாகும் விதத்தில் சிக்கிக் கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தவகையில் மேடை பேச்சுக்களில் பெரும்பாலும் தேவையற்று பேசி தலைமையின் தலையை உருட்ட வைத்துவிடுகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தனது உதவியாளரை மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.

இதுகுறித்த வீடியோவானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய உணவு நிறுவனத்தின் உணவு பதப்படுத்துதல் குறித்து மாநாடு மற்றும் கண்காட்சி இரண்டும் நடைபெற்றது. இதனை வேளாண் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் பேசுவதற்காக சென்ற பொழுது அவரது குறிப்பை உதவியாளர் கொடுக்க மறந்துவிட்டார்.

அவர் எடுத்து வருவதற்குள் நிகழ்ச்சி மேடையிலேயே அவரை எருமை மாடாட நீ?? என்று பேசியதோடு கொச்சை வார்த்தையையும் உபோயோகித்துள்ளார். இது அங்கு வந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. அத்தோடு விட்டு விடாமல் உதவியாளர் கொடுத்த பேபரை அவர் முகத்திலேயே தூக்கியும் எறிந்துள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி இவ்வாறு அமைச்சர் நடந்து கொண்டது மிகவும் மோசமான செயல் என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனிமனித உரிமையை மதிக்காமல் நடந்துக் கொள்வதாக-வும் கூறியுள்ளனர். இது ஸ்டாலினிடம் வரை செல்லுமா இதுகுறித்து நடவடிக்கை எடுக்கபப்டுமா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.