திமுகவில் மேலும் ஒரு எம்எல்ஏ வுக்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Photo of author

By Anand

கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் விதித்து வருகிறார். இந்நிலையில் சாதாரண மக்களை மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் கலந்து கொண்டதால் கொரோனா பாதிப்பிற்குள்ளான ஜெ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திமுகவில் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் கொரோனா பாதிப்பிற்குள்ளானது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சார்பாக போட்டியிட்டு செய்யூர் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான ஆர்.டி.அரசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

DMK Mla Corona - Updatenews360

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செய்யூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரான ஆர்டி அரசுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் இந்நிலையில், திமுக எம்எல்ஏவுக்குவும் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

முன்னதாக ரிஷிவந்தயம் தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கொரேனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.