மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தான் இனிகோ இருதயராஜ்.இவர் அவருடைய பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாடம் பல நன்மைகளை செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு எனது வார்டில் பல நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக எம்எல்ஏ இருதயராஜிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் ஏன் அங்குள்ள மக்களுக்கு நல்ல தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அந்த ஊர் மக்களிடையே அதிக பாராட்டுகளைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது மக்களுக்காக களத்தில் இறங்கி போராடி உள்ளார். திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.இவர் 43வது வார்டு கஜா நகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அந்தப் பகுதியில் குடிநீர் குழாயில் வரும் தண்ணீர் செந்நிறமாக வருவதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி மாநகராட்சி பொது கழிப்பிடம் ஆனது திறக்கப்படாமல் பல வருடங்களாக பூட்டிக் கிடப்பதையும் இந்த ஆய்வில் கண்டறிந்தார். உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து மீண்டும் மக்களுக்கு இந்த பொதுக்கழிப்பிடம் பயன்தரும் வகையில் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.அதேபோல அந்தப் பகுதியிலேயே குடிசை சார்ந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு குடிநீர் போர்வெல் அமைத்து நீர் தேக்க டேங்கை அமைத்து தர வேண்டும் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார்.ஆனால் மாநகராட்சி அதிகாரிகளும் அதனை சரி செய்யாமல் போர்வெல் போட்டதோடு நிறுத்தி வைத்திருந்தனர்.
அவர் கூறியபடி நீர்த்தேக்கத் தொட்டிகள் எதுவும் கட்டப்படவில்லை. இதனையெல்லாம் ஆய்வின் மூலம் கண்டறிந்த இனிகோ இருதயராஜ் அதிகளவு கோபமுற்றார். பிறகு அப்பகுதி மக்களுடன் சேர்ந்து சாலையில் போராட்டம் நடத்த தொடங்கினார்.இவர் போராட்டம் நடத்தத் தொடங்கிய உடனே பொன்மலை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர் போராட்டத்தில் இறங்கியதை அடுத்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ள இடத்திற்கு வந்தனர்.அவர்களிடம் இனிகோ இருதயராஜ் கூறியது, நான் கூறிய உத்தரவுகளை எதுவும் நிறைவேற்றாமல் இருப்பதை கண்டு நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து தரவேண்டும் என்று மீண்டும் அவர்களுக்கு ஆணையிட்டார். எம்எல்ஏ இவ்வாறு கடுங்கோபத்துடன் கூறியதை அடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட போர்வெல்லில் மின் மோட்டார் அமைத்து உடனடியாக ஆயிரம் லிட்டர் நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் வேலை தற்போது விருவிருவென நடந்து வருகிறது.இவர் மக்களுக்காக சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டு நீதி வாங்கிக் கொடுத்ததால் மக்கள் முன்னிலையில் இவர் ஒரு ஹீரோ போல காட்சி அளிக்கிறார் என கூறுகின்றனர்.