திமுக எம்எல்ஏ செருப்பை கையில் கொண்டு வந்த தலித் நிர்வாகி; தொடரும் சர்ச்சை சம்பவங்கள்.!!

Photo of author

By Jayachandiran

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி எம்எல்ஏ விஷ்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் உள்ள சேதமடைந்த அணையை பார்வையிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றார். அதிக மழை பெய்த காரணத்தால் அவர் சென்ற பாதை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் காலில் இருந்த செருப்பை கழட்டிவிட்டு நடந்து சென்றார்.

ஆனால், அவருடன் சென்ற திமுகவைச் சேர்ந்த வெங்கட சமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் என்பவர், எம்எல்ஏ கழட்டிவிட்ட செருப்பை தூக்கிச் சென்றார். இந்த காணொளி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்பு திமுக கட்சியை சேர்ந்த ஆர்எஸ் பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு திமுக நிர்வாகி, எம்எல்ஏ-வின் செருப்பை கையில் எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையாகி வருகிறது. தலித் நிர்வாகியை செருப்பு தூக்கிவரச் சொல்வதா.? என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. இதுறுனபேசிய திமுக நிர்வாகி சங்கர் இதனை மறுத்துள்ளார். சகதி, முட்கள் அதிகம் இருந்த காரணத்தால் எம்எல்ஏ செருப்பை கழட்டி வைத்துவிட்டுதான் நடந்து வந்தார். நான்தான் செருப்பை தூக்கி வந்தேன் என்றார். நான் தலித் என்பதால் என்னை பகடைக்காயாக்க வேண்டாம் என்றும் சங்கர் கூறியுள்ளார்.