விபத்தில் சிக்கிய திமுக சட்டசபை உறுப்பினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

Photo of author

By Sakthi

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் மகாராஜன் இவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் மகாராஜனின் கார் மீது எதிரே வந்த வாழைக்காய் ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் மகாராஜன் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான காயமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டார். சட்டசபை உறுப்பினர் மகாராஜன் காரின் முன்பகுதியில் பெரிய அளவில் சேதம் உண்டாகி விட்டது.

எதிரே வந்த மினி லாரியில் இருந்து ஐந்து பெண் தொழிலாளர்களுக்கு லேசான காயம் உண்டானது. தகவலறிந்து வத்தலகுண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகைதந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி இருக்கிறார்கள். அதோடு விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சபை உறுப்பினரின் கார் விபத்தில் சிக்கி இருப்பது வத்தலகுண்டு பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.