திமுக எம்.எல்.ஏ‌. மா. சுப்ரமணியன் மகன் காலமானார்!

Photo of author

By Parthipan K

சைதாப்பேட்டை ‌திமுக எம்.எல்.ஏ. மா. சுப்ரமணியனின் இளையமகன் அன்பழகன் (வயது 34) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மா. சுப்ரமணியன். இவர் தற்போது சென்னை தெற்கு மாவட திமுக செயலாளராகவும் பதவி வகுத்து வருகிறார். இந்நிலையில், எல்.எல்.ஏ. மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். மூவரும் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

சுப்ரமணியனின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று உயிரிழந்தார். இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.