மருத்துவர் ராமதாசை ஆதரிக்கும் திமுக எம்பி? ஆச்சரியத்தில் பாமகவினர்! குழப்பத்தில் திமுக தொண்டர்கள்

Photo of author

By Parthipan K

மருத்துவர் ராமதாசை ஆதரிக்கும் திமுக எம்பி? ஆச்சரியத்தில் பாமகவினர்! குழப்பத்தில் திமுக தொண்டர்கள்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு இழைக்கப்பட்ட சமூக நீதி அவலங்களையும் அதற்காக பாமக மற்றும் வன்னியர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளையும் விவரிக்கும் வகையில் சுக்கா மிளகா சமூக நீதி என்ற நூலை சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் மருத்துவர் ராமதாஸ் எழுதிய இந்த புத்தகத்தை திமுக எம்.பி ஆ.ராசா தன்னுடைய மேசையின் மீது வைத்திருக்கும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனையடுத்து இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பதிலை திமுக மற்றும் பாமக தொண்டர்கள் ஆர்வமாக தேடி வருகின்றனர்?

சமூகநீதி பற்றி அனைத்து மக்களும் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவும் சமூக நீதியின் தேவை என்ன என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தனது முகநூல் பக்கத்தில் கொரோனா காலக்கட்டத்தில் சுக்கா மிளகா சமூகநீதி? என்ற தலைப்பில் தொடரை ஒன்றை தினம் எழுதினார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,அதில் வன்னியர்களுக்கு எப்படி எல்லாம் தனி‌இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது என்றும், அந்த சூழ்ச்சிக்கு காரணம்‌ யார் யார் என்றும் சொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தொடரை எழுதி முடித்தவுடன்‌‌ மருத்துவர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு அதில் தினம் ஒரு தலைப்பு கொடுத்து அதிலிருந்து 15 கேள்விகளை கேட்டு அனைவரையும் தேர்வுக்கு தயார் செய்தார், கிட்டத்தட்ட ஒரு ஆசிரியர் போல் செயல்பட்டார்.இந்த தேர்வில் அதிகமாக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பரிசு தருவதாகவும் கூறியிருந்தார்.

இதனால் பெரும்பாலானா தொண்டர்கள் படித்து தேர்வை எழுதினார்கள்.இந்த செயல் அந்த கட்சி தொண்டர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது .நல்ல வரவேற்பை பெற்றதால் பின்பு இதை புத்தகமாக தயார் செய்து செப்டம்பர் 17 ல் சுக்கா மிளகா சமூக நீதி என்ற தலைப்பில் வெளியிட்டார்கள்.அனைத்து தொண்டர்களும் படித்து தெளிவு பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட இந்த புத்தகம் தான் தற்போது திமுக எம்.பி ஆ.ராசா மேஜையில் இருப்பதாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. புத்தகங்கள் அதிகம் படிக்கும் பழக்கம் உள்ளவர் ஆ .ராசா. அதனால் மருத்துவர் ராமதாஸ் எழுதிய புத்தகம் அங்குள்ளது, இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் எதுவும் இல்லை என்று திமுக தொண்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தை பார்த்த பாமக தொண்டர்கள் இந்த புத்தகத்தை படித்தாவது திமுக தலைவர்களும், திமுக உ.பிகளும் சமூகநீதி என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும்,சிலர் திமுகவுக்கு சமுக நீதி பற்றி பேச Reference இந்த புத்தகத்தில் இருந்து தான் எடுத்துக் கொள்கிறார் என்றும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு போராட்டம் தற்போது தீவிரமாக செல்வதால் வன்னியர்‌ மக்களின் வாக்குகளை பெற , 2021 சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களின் தனி‌ இட ஒதுக்கீடு பற்றி தேர்தல் அறிக்கை வரப்போகிறது.மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இவர் உள்ளதால் அதற்காக தான் இந்த புத்தகம் அங்குள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் சிலர் இது குறித்து தங்கள் கருத்துக்களை கூறிவருகிறார்கள்.