தி.மு.க. எம்.பி. செய்த செயல்! பாதிக்கப்பட்டவர் என்ன ஆனார்?
தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு அதை தொடர்ந்து கண் பார்வை தெரியாமல் போகின்றது.
திருவெற்றியூர் அருகே தனியார் மருத்துவ மனையில், கரும்பு பூஞ்சை நோய் தாக்கி 8 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் குமார் முன்னிலையில் கவச உடை அணிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
மேலும் ஒரு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கரும் பூஞ்சை நோய் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு வருவதாகவும், மேலும் இதை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கொரோனா போல் இது உயிரை எடுப்பதில்லை எனவும் கூறினார்.
ஆரோக்கியமாக அனைவரும் சாப்பிடுங்கள் என்றும், இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்க வில்லை என்றும் கூறினார். எனவே ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதித்தோர் உடனடியாக மருத்துவமனையை அணுகி நோய்க்கான தீர்வை காணுங்கள் என்றும் கூறினார்.