திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

Photo of author

By Parthipan K

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

Parthipan K

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதிக்கு (வயது 73) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். லேசான அறிகுறி மட்டும் இருந்ததால் அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.