ஆய்வு செய்யவிடாமல் அரசு ஊழியர்களை கொச்சையாக பேசிய திமுக பிரமுகர்!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆளும்கட்சியின் க்ரைம் அப்டேட்!!
தினந்தோறும் திமுக நிர்வாகிகள் அவர்களின் அதிகாரம் கொண்டு மக்களையும் அரசு ஊழியர்களையும் மிரட்டி வருகின்றனர். நேற்று கூட திமுக எம் பி.ஆர் என் ராஜேஷ் குமார் நமது திமுக நிர்வாகிகள் மட்டும்தான் மணல் அல்ல வேண்டும் மற்றவர்கள் யாரும் அனல் அல்ல கூடாது, இவ்வாறு பேசிய வீடியோ வைரலானது. இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளை திமுக பிரமுகர் மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்த போதிலும், நெல்லை அருகே உள்ள உவரி மீனவர் கிராமத்தில் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை அருகே உள்ள உவரி மீனவர் கிராமத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் தடை செய்த சுறுக்கும்மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக புகார் வந்தது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. இவ்வாறு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது தடை செய்யப்பட்ட சுருக்கும்படி வலைகளை அந்த ஊரை சேர்ந்த மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்கும் படி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். உத்தரவின் பெயரில் மீன்வளத்துறை இயக்குனர் மோகன் குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள உவரி மீனவர் கிராமத்திற்கு சென்றனர்.
அவ்வாறு சென்ற அதிகாரிகளை அங்கு வந்த திமுக பிரமுகர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் தடுத்து நிறுத்தினார். மீனவர் பிரச்சனையில் நீங்கள் தலையிட என்ன அதிகாரம் உள்ளது? இவ்வாறு சோதனை செய்ய வந்தவர்களிடம் தனது கொந்தளிப்பை காட்டினார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகரை எதிர்த்து, ஆய்வுக்கு வந்தவர்களும் எங்களைத் தாண்டி எப்படி சுருக்குவடி வலைகளை பயன்படுத்துவீர்கள் என்று பார்க்கிறோம், என அவருக்கு இணையாக பேசினர். இவ்வாறு ஆய்வு செய்தவர்கள் பேசியதால் கோபமடைந்த அந்தோணியார், வந்தவர்களை தகாத வார்த்தையால் பேசினார்.
மேலும் அவர்களை அடிப்பதற்கும் சென்றார். சோதனையாளர்களுடன் வந்த காவல்துறையினர், அந்தோணி ராயை தடுத்து நிறுத்தி சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் அந்தோணியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.அந்த அரசு ஊழியர்கள்,உவரி காவல் நிலையத்தில் சோதனைக்கு சென்ற எங்களை வேலை செய்யவிடாமல் மிரட்டியதாக புகார் அளித்தனர்.