திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!!

Photo of author

By Rupa

திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!!

Rupa

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உட்க்கட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முன்பு இருந்த 64 மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் அவர்களே பணியமர்த்தப்பட்டனர். ஏழு மாவட்டங்களில் மட்டும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமித்தனர். இதற்கு அடுத்தபடியாக திமுக கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.

இந்த பொதுக்குழு கூட்டமானது வரும் ஒன்பதாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டமானது சென்னை கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். இதில் திமுக கட்சி தலைவர், பொதுச் செயலாளர்,பொருளாளர் ஆகிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர்.இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இன்று முதல் அறிவாலயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பொது செயலாளர் ஆக பலர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் கனிமொழி பொறுப்பேற்பார் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக வேப்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.