ஜெ.அன்பழகன் இறப்பை தொடர்ந்து திருவல்லிக்கேணி தொகுதி காலியாக அறிவிப்பு!

0
139

சென்னை திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ -வாக திமுக கட்சியின் ஜெ.அன்பழகன் இருந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா என்னும் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், முதல் நாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார.

முதலில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மருத்துவ சிகிச்சை பலனின்றி ஜூன் 10 ஆம் தேதி காலை 8 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கட்சி பொறுப்பில் அவர் வகித்து வந்த எம்எல்ஏ பதவி காலியானதால் திருவல்லிக்கேணி தொகுதி காலியான தொகுதி என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார். சட்டசபையில் திமுக எம்எல்ஏ எண்ணிக்கை 100 ஆக இருந்த நிலையில் கடந்த நாட்களில் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன் மற்றும் ஜெ.அன்பழகன் ஆகிய மூவர் மறைந்த நிலையில் திமுக வின் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 97 ஆக குறைந்துள்ளது.

Previous articleஇரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்! முக்கிய அறிவிப்பு!
Next articleகுடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்! – தமிழக அரசு அறிவிப்பு