திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்கழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்கழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!!

Sakthi

DMK party's high level action plan meeting!! Announcement to be held on May 20!!
திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்!! மே 20ல் நடத்தப்படும் என அறிவிப்பு!!
திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் பற்றி முக்கியமான தகவலை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதாவது உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் தேதியை அவர் கூறியுள்ளார்.
அண்மையில் திமுக கட்சியில் அமைச்சரவையில் பல மாற்றங்கள் நடைபெற்றது. பல முக்கிய இலாக்காக்களின் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். நாசர் அவர்களிடம் இருந்து பால்வளத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. நிதியமைச்சர் மாற்றப்பட்டார். இதையடுத்து திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் பற்றி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வரும் மே மாதம் 20ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் திமுக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம், இந்த மாற்றத்தால் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு, 2024ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகள், மேலும் பல விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக திமுக பொதுச் சொயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.