விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

0
96

விழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்! விக்கிரவாண்டியிலும் சரிப்பார்களா?

விழுப்புரம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார் கா.பொன்முடி அவர்கள். மு.க.ஸ்டாலினுக்கு இன்றளவும் அவருக்கு நம்பிக்கை உரிய தளபதியாகவும் இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுகவினரை கேட்டாலே சொல்லி விடுவார்கள்.

என்ன தான் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் மற்றும் தலித்துகள் அதிகம் பேர் வசித்து வந்தாலும் கட்சிக்காக பல தியாகங்களை செய்தாலும், உழைத்தாலும் திமுகவை பொருத்த வரை மாவட்ட செயலாளரான பொன்முடி தான் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை மட்டுமே கட்சியில் உயர்த்தி விடுவதில் வல்லவராக இன்றளவும் தொடர்ந்து வருகிறார்.

செஞ்சி ராமச்சந்திரன் கட்சியை விட்டு விலகி மதிமுகவிற்கு சென்ற பின்னர் மாவட்ட செயலாளர் பதவிக்கு வந்த பொன்முடி தனது திறமையால் இன்றளவும் இந்த பதவியை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்காத வண்ணம் இருந்து வருகிறார்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்து தற்போது மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட திமுகவில் ஒரு மாவட்ட செயலாளர் பதவி கூட வன்னியர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பான்மையான சமுதாயமான வன்னியர் சமுதாயத்திற்கு அம்மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னரும் முக்கிய பதவி எதுவும் வழங்காமல் தொடர்ந்து தனது சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை கொடுத்து வருகிறார்.

இதன் காரணமாகவே கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் பொன்முடியின் கோட்டை என்று அழைக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் வன்னியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொன்முடியை மண்ணை கவ்வச் செய்தனர். இதன் காரணமாக பொன்முடி கடும் கோபத்தை வன்னியர்கள் மீதும் காட்டினார். இதன் காரணமாக 2016-ஆம் ஆண்டு தேர்தலில் விழுப்புரம் தொகுதியை விட்டு தனது சொந்த தொகுதியான திருக்கோவிலூருக்கு ஓடினார்.

தொகுதியை விட்டு ஓடினாலும் தனது சாதிவெறியை காட்டிவிட்டு தான் சென்றார். தன்னைத் தவிர விழுப்புரம் தொகுதியில் யாரும் வெற்றி பெறக்கூடாது நிற்கவும் கூடாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதியை கொடுத்தார். இது வன்னியர்களுக்கு மேலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சி.வி.சண்முகம் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அமைச்சராகவும் உள்ளார்.பொன்முடியின் செல்வாக்கை வன்னியர்களின் துணையுடன் முற்றிலும் ஒழித்ததில் இவருக்கும் முக்கிய பங்குள்ளது.

விழுப்புரம் மாவட்ட திமுகவில் உள்ள ஒன்றிய செயலாளர்கள் பெரும்பாலோர் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்களே இருப்பார்கள். மாவட்டத்தின் பெரும்பான்மையான சமுதாயமான வன்னியர்களுக்கு ஒன்றிய செயலாளர் கூட கிடைக்க கூடாது என்பதிலும் பொன்முடி தெளிவாக இருப்பார்.

தற்போது விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொன்முடி மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக கிராமம் கிராமமாக சென்று அதிமுக மற்றும் பாமக குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். என்ன தான் விமர்சனம் செய்தாலும் வன்னியர்கள் எதிர்ப்பு பொன்முடியை தொடர்ந்து துரத்திக் கொண்டு தான் இருக்கிறது.

எப்படி 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை வன்னியர்கள் சரித்தார்களோ. அதேபோல தற்பொழுது “அனாதை தலைவர்” என்று மருத்துவர் ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வன்னியர்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் உள்ள கலிங்கமலை கிராமம் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அவர்களின் சொந்த கிராமம் ஆகும். அவருக்கு சொந்த ஊரில் மட்டும்தான் செல்வாக்கு தவிர தொகுதி முழுவதும் அல்ல என்பது அவருக்கே தெரியும்.

பாமகவின் பலம் மிகுந்த தொகுதி என்பதால் பலமான வன்னியர் பிரமுகரை தேர்தலில் களமிறக்கியதால் சுலபமாக வெற்றியை பறித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஜெகத்ரட்சகன் துணை நிற்பார் என்றும் பொன்முடியும் நம்பிக் கொண்டு இருக்கிறார்.

வன்னியர்கள் அதிகம் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் பொன்முடியின் அரசியல் கணக்கு பலிக்கின்றதா அல்லது மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க அதிமுக அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் செயல்பாடு மற்றும் பாமகவின் வாக்கு வங்கி வெற்றிப் பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K