திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

0
172
#image_title

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிக்கான திமுக தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் காணொலி மூலம் பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் :

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பூத் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்க இருப்பதால் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும்.திமுகவின் தேர்தல் அறிக்கைகள் வாக்குறுதிகளை அண்டை மாநிலத்திலும் பின்பற்றும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று பேசி உள்ளார்.

மேலும் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்தி உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.

உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் உண்டு, உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை.சுணக்கமாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleநிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!
Next article14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!!