முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

Photo of author

By Sakthi

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஏழு மாதங்களாக எந்த ஒரு வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் அதேநேரம் காணொளி மூலமாக நாள்தோறும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வந்தார் ஸ்டாலின்.

சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார் அறைக்குள் இருந்து வெளியே வரவே அவர் மறுக்கின்றார் என்று சாடியிருந்தார். இன்றைய தினம் திமுகவினருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் இது சம்பந்தமாக குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறார் திமுக தலைவர்.

அந்த கடிதத்தில், தமிழக மக்களுக்கும், திமுகவுக்கும், உள்ள உறவு என்பது மலைக்கோட்டையை விட வலிமையானது அதனால் தான் கொரோனா பேரிடர் நேரத்தில் கூட எங்கள் கழகத்தினர் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலமாக பசித்திருக்கும், பரிதவிக்கும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். மக்களுடைய குறைகளை களைந்து அதற்கு தீர்வு காண மகளிர் அணி சார்பாக போராட்டம், மாணவரணி சார்பாக போராட்டம், இளைஞரணி சார்பாக போராட்டம், விவசாயிகள் அணி சார்பாக போராட்டம், தோழமை கட்சிகளுடன் ஒன்றிணைந்து போராட்டம், என்று தொடர்ந்து களத்தில் நின்று மக்களுடனேயே பயணித்து வருகின்றது திமுக என்று தெரிவித்திருக்கின்றார் ஸ்டாலின்.