திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த பேராசிரியர் க.அன்பழகன் கடந்த மார்ச் மாதம் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
அதிலிருந்தே அந்த பதவியை கைப்பற்றுவதற்கான போட்டி திமுக முக்கிய தலைவர்கள் இடையே நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய வட்டத்திலிருக்கும் துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆக்கப்படலாம் என கூறப்பட்டது.
அதற்கேற்றார் போல் அவர் தான் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மார்ச் 29ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக பொதுக் கூட்டத்தில் இவர் ஒரு மனதாக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அந்த குட்டம் ரத்தானது.
இந்நிலையில் அந்த பொதுக்குழு கூட்டப்பட்டு புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை துரை முருகனே பொருளாளராக தொடர்வார் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து துரை முருகன் அளித்த ராஜினாமா கடித்ததின் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.