கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம்

0
165
Krishnamoorthy DMK
Krishnamoorthy DMK

கொரோனாவிலிருந்து மக்களை காக்க போராடிய செவிலியரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் செய்த அட்டூழியம்

கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க மக்களுக்காக சேவை செய்து தன் உயிரை நீத்த இளம் செவிலியரின் உடலை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, ஆபாசமாக பேசி திமுக பிரமுகர் ரவுடித்தனம் செய்தது அம்பலமாகியுள்ளது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை என தொடர்ந்து திமுக தலைவர் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் மக்களுக்காக சேவை செய்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசிய சம்பவம் திமுகவினரின் வழக்கமான அட்டூழியத்தை வெளி உலகிற்கு காட்டியுள்ளது.

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்த அவரின் உடல்நிலை கடந்த 1 ஆம் தேதி திடீரென மோசமானது. இதனையடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவர் வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி 2 ஆம் தேதி உயிரிழந்தார்.

Ranipet Nurse Died by Corona
Ranipet Nurse Died by Corona

இதனையடுத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள இடுகாட்டிற்கு சுகாதாரப் பணியாளர்கள் நேற்று கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி முறையாக கிருமிநாசினி தெளித்து அவரின் உடலை அடக்கம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சில திமுக பிரமுகர்கள் அங்கு திரண்டு செவிலியரின் சடலத்தைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். காவல் துறையினரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து அவர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டதுடன் போராட்டத்திலும் குதித்தனர்.

மேலும் குறிப்பாக இந்த போராட்டத்தின் போது திமுக பிரமுகர் குட்டி என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவர் செவிலியரின் சடலத்தைப் புதைக்கவிடாமல் தடுத்துள்ளார்.தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் வேலை செய்துவரும் சுகாதாரப் பணியாளர்களை அவர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி மிரட்டியும் உள்ளார்.

இதன் பின்னர் காவல்துறையினர் விடுத்த கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து பின்னர் திமுக நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணியில் இறங்கிப் போராடி உயிரிழந்த இளம் செவிலியரின் உடலை புதைக்க விடாமல் திமுக நபர்கள் அராஜகமும், ஆபாச வார்த்தைகளை பேசி அட்டூழியமும் செய்தது அங்கிருந்த சமூக ஆர்வலர்களை முகம் சுளிக்க வைத்தது.

Ranipet Nurse Died by Corona
Ranipet Nurse Died by Corona

இப்படி வெளியில் நல்லவர்கள் போலவும், இது போன்ற மிகவும் கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வரும் திமுகவிற்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அங்கிருந்த சுகாதாரத் துறை பணியாளர்கள் புலம்பி கொண்டே பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல் துறையினர் தற்போது சம்பந்தப்பட்ட அந்த திமுக பிரமுகர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதனையடுத்து கைதுக்கு பயந்து தலைமறைவாக உள்ள திமுக பிரமுகருக்கு திமுகவின் முன்னணித் தலைவர்கள் பலர் தப்பிப்பதற்கு உதவி செய்ததாகவும் அப்பகுதியில் தகவல் பரவி வருகிறது .

Previous articleஇந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?
Next articleஜம்மு காஷ்மீரை மொத்தமாக இணைத்து புதிய மேப்பை உருவாக்கி வெளியிட்ட இம்ரான்கான்! பதிலடி கொடுக்கும் இந்தியா