கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் இதனால் பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் முதலமைச்சர் ஸ்டாலின் தாறுமாறாக பாராட்டி வருகிறார்கள்.
இதனால் எதிர்க்கட்சிகளை கூட சில நேரம் வாயடைத்து போகின்றன அதோடு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதிகள் முதல் முறையாக களம் கொண்டு வெற்றி பெற்று இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்களின் ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து செய்து வருகின்றார். அதோடு அனைத்து விஷயங்களையும் நேரில் சென்று கண்காணித்து வருகின்றார் இதன் காரணமாக, அந்த தொகுதி மக்களுக்கு உதயநிதி ஒரு சூப்பர் ஹீரோவாகத்தான் தெரிகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வாலாஜா ஒன்றியத்தில் திமுகவின் சார்பாக ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
அந்த சமயத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஐந்து மாதங்கள் கூட இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவித்து இருப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார் என தெரிவித்திருக்கிறார். சென்ற காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 சதவீத வெற்றியை அடைந்தது. இந்த நிலையில் தற்சமயம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று இருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என கூறியிருக்கிறார்.
இனி வரும் 50 வருடங்களுக்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிதான் தொடர்ந்து கொண்டிருக்கும் வேறு கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பே கிடையாது தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்று சொல்வார்கள். ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவருடைய மகன் 32 அடி பாய்வதுபோல் செயல்புரிந்து வருகின்றார் என அமைச்சர் காந்தி உரையாற்றி இருக்கிறார்.