பாமகவை பின்பற்றிய திமுக பொதுக்குழு தீர்மானம்! மு.க.ஸ்டாலின் முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி

Photo of author

By Parthipan K

பாமகவை பின்பற்றிய திமுக பொதுக்குழு தீர்மானம்! மு.க.ஸ்டாலின் முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்,. கூட்டத்தில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முக்கிய பிரமுகர்கள் முக்கிய நிர்வாகிகள் உட்பட 4400 பேர் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்,.கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் விதிகளில் சட்ட திருத்தம் குறித்தும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின்:
திமுக ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் சதி செய்கின்றன என்வும் திமுகவினர் இடையே ஒற்றுமை இல்லாவிட்டால் நாம் வெற்றி பெற முடியாது, திமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்படும் வேண்டும் என்று பேசினார்,. மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனறு அறிவுறுத்தினார்.

தலைவர் கலைஞர் போல் எனக்கு பேசவும் எழுதவும் தெரியாது! ஆனால், அதை முயற்சி செய்யும் துணிவு எனக்கு உண்டு என்றும் தெரிவித்தார்!

கூட்டத்தில் பல அதிரடி சீர்திருத்தங்களை திமுக செய்தது, கட்சியின் மிக முக்கிய பொறுப்பான ஒன்றியக் கழகச் செயலாளர் பதவியை, முக்கியமாக பாமக பின்பற்றிவரும் ஒன்றியச் செயலாளர்கள் முறையை திமுக பின்பற்றியுள்ளது! அதாவது 10 ஊராட்சி அமைப்புகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைக்கப்படும் என்று அதிரடியாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,.

இதன் நோக்கம் மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களையும் தனது சாதியை சேர்ந்தவர்களுக்கும் ஒன்றிய செயலாளர் பதவியை வழங்குவார்கள், பல ஆண்டுகளாக ஒரே நபர் ஒன்றிய செயலாளர் பதவியை அலங்கரித்து வருவதாக திமுகவில் ஏற்கனவே அதிருப்தி தொண்டர்களிடையே இருந்து வருகிறது,. இதற்கு முடிவுகட்டவே இந்த முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது,. இந்த முடிவின் மூலம் திமுக தொண்டர்களும் உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சிதான் தனது கட்சியின் ஒன்றிய செயலாளர் பதவியை ஒரு ஒன்றியத்துக்கு மூன்று நபர்களை நியமிக்கும்,. அவர்களுக்கு 10 முதல் 15 ஊராட்சிகள் மட்டுமே ஒதுக்கப்படும்,. இந்த நடைமுறையை திமுகவும் பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது,. இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து பதவிகளை கொடுப்பதற்கும் இது உதவியாக இருக்கும் என திமுக நம்புகிறது. மேலும் இளைஞரணி வயது வரம்பு அதிகரிப்பு. திருநங்கைகளுக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை,. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உறுப்பினர் ஆகும் வசதி,. பாஜகவை போல் இணையதளத்தில் உறுப்பினராகும் வசதி போன்றவை திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன,.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

2020ம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது.

வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்.

10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைக்கப்படும்.

திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம்.

இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம்.

வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் கொண்டு வருவது

உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது.

இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை மட்டும்.

மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம்.

பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்.

அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.

*மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்

அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் பொதுச்செயலாளரிடம் இருந்த அதிகாரத்தை தனது வசப்படுத்தினார் மு.க.ஸ்டாலின், கட்சியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் நீக்கலாம் என்ற விதிமுறையை திருத்தி கட்சித் தலைவருக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது,.

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இன்னும் பல அதிரடி சீர்திருத்தங்களை மு.க.ஸ்டாலின் செய்வார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன