மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பொன்முடிக்கு உடல்நலக் குறைவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அவருக்கு பித்தப்பை பிரச்சனை இருந்ததன் காரணமாக, உடல்நலக் கோளாறு உண்டானது எனவும், அது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீராகிவிடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்னரே பொன்முடி கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆனார். இந்த நிலையில் தற்சமயம் அவர் மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடுமையான அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனைக்கு படை எடுத்து இருப்பதாகவும், தெரிவிக்கப்படுகிறது