தமிழக சட்டசபை தேர்தல் என்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இன்று தேர்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் மே மாதம் இரண்டாம் தேதி என நேற்றைய தினம் என்ன பட்டது.இதில் அதிமுக, திமுக என்று இரு கட்சிகளின் பல முக்கிய தலைவர்கள் போட்டியிட்டார்கள் அதேபோல பல முக்கிய தலைவர்கள் அதிமுக சார்பாக தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்.
அந்த விதத்தில், நேற்றையதினம் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி இருந்து வந்தது. இதன் காரணமாக, பெரிய பெரிய ஜாம்பவான்களும் வெற்றி அடைவார்களா அல்லது தோல்வி பெறுவார்களா என்று கடைசி வரையில் எல்லோரையும் பரப்பிலேயே வைத்திருந்தது.
அந்த விதத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமுவுக்கும் கடுமையான போட்டி நிலவியது என தெரிகிறது. இருவருமே ஒருவரை ஒருவர் முந்திச் செல்வது அதன்பிறகு பின் தங்குவது இவ்வாறு ஆரம்பம் முதலே சென்றுகொண்டிருந்தது. ஆனாலும் ஒரு சமயத்தில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது துரைமுருகன் ஆரம்பம் முதலே பின்தங்கிய நிலையிலேயே இருந்தார். அதன் காரணமாக திமுகவை சார்ந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் இதுவரையில் பத்து முறை போட்டியிட்டு இருக்கின்ற துரைமுருகன் ஒரு முறை கூட தோல்வியை சந்தித்தது இல்லை என்ற நிலையில். இந்த முறை அவருக்கு அந்த தொகுதியில் வெற்றி பெறுவது சற்று கடினமான விஷயமாக இருந்தது.
கடைசி வரையில் அவர் வெற்றி பெறுவாரா அல்லது மாட்டாரா என்ற டென்ஷன் அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், துரைமுருகன் 84 ஆயிரத்து 195 வாக்குகளும் அதிமுகவின் வேட்பாளர் 83 ஆயிரத்து 400 வாக்குகளும் பெற்றிருந்தார்கள். இதில் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதற்கிடையில் அவருக்கு திமுகவின் அமைச்சரவையில் முக்கிய துறை வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் அமைச்சரவையில் அவர் பெரிதும் எதிர்பார்த்த பொதுப்பணித்துறை அவருக்கு இல்லை அதற்கு பதிலாக சட்டத்துறை தான் கொடுக்கப்படும் என்று ஸ்டாலின் தீர்மானித்து இருப்பதால் துரைமுருகன் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.