சமீபத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புக்கு திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் பலியாகியுள்ளார்.
திமுகவின் மாவட்ட நிர்வாகமானது வட சென்னை மற்றும் தென் சென்னை என்ற வகையில் இருந்தபோது வடசென்னையின் மாவட்டச் செயலாளராக எல் பலராமன் என்பவர் பதவி வகித்து வந்தார்.திமுகவிலிருந்து வைகோ வெளியேறியபோது வடசென்னையில் திமுகவை கட்டி காப்பாற்றிய நபர்களில் இவரும் ஒருவர்.
78 வயதாகும் திமுகவின் மூத்த நிர்வாகியான இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 19 ஆம் தேதி சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திமுகவின் மூத்த நிர்வாகியான இவர் மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.