புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சார்ந்தவர் நீலகண்டன் இவருடைய மனைவி கோகிலா இவர் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நடுவே கோகிலா இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்ததாக கிடைத்த ஒரு கடிதம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் நான் கோகிலா என்னுடைய சாவுக்கு எம்.எம் குமார், அவருடைய மனைவி புவனேஸ்வரி உள்ளிட்டவர் தான் காரணம். திமுக கட்சியின் அராஜகம் மற்றும் அவர்களுடைய அதிகாரத்தை குமார் எங்களிடம் காட்டி விட்டார் செய்யாத தவறுக்காக பொய் வழக்கு போட்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில் என்னையும், என்னுடைய கணவரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார் கோகிலா. அதிகாலை 5 மணிக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று என்னை மிரட்டினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் கோகிலா.
தற்கொலைக்கு திமுகவினர் காரணம்
காவல் துறையினர் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகிறார்கள் இறுதியாக காவலர்கள் என்னை திருச்சி சிறையில் அடைப்பதாக தெரிவித்து விட்டு சென்றனர். இதனால் என்னுடைய கணவன் மன உளைச்சலடைந்து கடந்த 10 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார் கோகிலா. ஆகவே மன உளைச்சல் காரணமாக, இந்த முடிவை எடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் உயிரிழந்த கோகிலா.
இந்த கடிதத்தை கைப்பற்றிய உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். கடிதத்தை வைத்துக் கொண்டு கோகிலா தெரிவித்துள்ள சம்பந்தப்பட்ட புவனேஸ்வரி, குமார் உள்ளிட்டோர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டிய காவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரி கோகிலா திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பெயரால் பதியப்பட்ட பொய் வழக்கினால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக உயிரைத் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. (1/2) pic.twitter.com/81RkWXyfj8
— K.Annamalai (@annamalai_k) October 2, 2022
இழப்பீடு வழங்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்தைச் சார்ந்த சகோதரி கோகிலா திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பெயரால் பாதிக்கப்பட்ட பொய் வழக்கினால் ஏற்பட்ட மன வேதனை காரணமாக உயிரை துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை வழங்குகிறது.
திறன் இல்லாத திமுக அரசின் அராஜக போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த உயிரிழப்புக்கு காரணமான எல்லோரின் மீதும் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மற்றும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.