பெண்களை அவமதிக்கும் அமைச்சரை உடனே பதவியிலிருந்து நீக்குங்க! முதலமைச்சருக்கு பாஜக அதிரடி வேண்டுகோள்!

0
85

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டசபை உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்றுக் கொண்டார்.

அப்போது அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர் எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடக்கும் பணிகள் தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிப்பதில்லை. இது தொடர்பாக பிடிஓவிடம் தெரிவித்தாலும் அதற்கு முறையான பதில் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.

அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்

இதனை அடுத்து அவரை அமரச் சொன்ன அமைச்சர் பொன்முடி ஓ அப்படியா? நீ அதனால தான் பேசுற உக்காரு என்று ஒருமையில் பேசியுள்ளார். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்டோர் உங்களுடைய பிரச்சனைகளை தனியாக பேசிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவரை நீங்கள் எஸ்.சி. தானே என்று பொதுமக்கள் முன்னிலையில் பொது மேடையிலேயே கூப்பிட்டு பேசியதும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆகவே பெண்களை ஓசி பயணம் என்று பேசிய சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி சிக்கியிருப்பது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான நிலையில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பீட்டர் பதிவில் வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பெண் ஒன்றிய கவுன்சிலர் ஒருவரை ஒருமையில் பேசியதுடன் உனக்கும், ஊராட்சி தலைவருக்கும் இருக்கின்ற பிரச்சினையை தனியாக பேசிக்கோங்க என்று தெரிவித்ததோடு, அப்படியா? நீ, ஏய் என்றெல்லாம் ஆணவத்துடன் அவமரியாதையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக

இதற்கு முன்பாகவே பெண்களை பேருந்தில் ஓசி ஓசியில் போறீங்க என்று கேவலப்படுத்தி என் நிலையில் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஒன்றிய கவுன்சிலரை அவதூறாக ஆதிக்க மனப்பான்மையுடன் பேசியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பொன்முடி அவர்கள் தமிழ் பெண்களை தொடர்ந்து அவமான ப்படுத்தி வருகிறார். அதோடு அராஜகமாக பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடியை நீக்க வேண்டும். என்று நாராயணன் திருப்பதி தன்னுடைய வலைதள பதிவின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.