பகுத்தறிவு பேசும் ஸ்டாலின் துவக்கி வைத்த முருகப் பெருமான் விளையாட்டு அளப்பரியது எச் ராஜா!

Photo of author

By Sakthi

சிவகங்கை அருகே பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, உலகில் இருக்கக்கூடிய எல்லாவிதமான ஊழல்களையும் செய்திருக்கும் ராசாவிற்கு என்னை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? 2ஜி வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்வது வெகு தொலைவில் இல்லை பகுத்தறிவு பேசும் ஸ்டாலினை வேல் பிடிக்க வைத்த தமிழ் கடவுள் முருகனின் விளையாட்டு அளப்பரியது. தமிழ்நாட்டில் தமிழ் கடவுள் முருகனின் புரட்சியானது தொடங்கிவிட்டது. என்று தெரிவித்தார்.

அதேபோல முருகப்பெருமானின் பக்தர்கள் அனைவரும் தைப்பூசத்திற்கு பழனிக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு திருநீறு பூசிக் கொண்டால் மட்டும் போதாது. அவரை இழிவு செய்யும் கருப்பர் கூட்டத்திற்கு உதவி புரியும் ஸ்டாலினையும் அவர் சார்ந்த திமுக கட்சியையும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் பழனிக்கு செல்வதோ அல்லது திருநீறு பூசிக் கொள்வது போலியான நடிப்பு என்று அர்த்தம் என தெரிவித்திருக்கிறார் எச் ராஜா.