திமுகவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்!

Photo of author

By Sakthi

சென்ற ஆறாம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், எதிர்க்கட்சியான திமுக எப்படியும் நாம்.வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.அதற்கு காரணம் என்னவென்றால் வெளியான கருத்துக்கணிப்பு மற்றும் ஐபேக் நிறுவனம் தெரிவித்த தகவல் என எல்லாவற்றையும் கேட்டு திமுக தலைமை குஷியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்படியானாலும் 180 தொகுதிகள் நிச்சயமாக நம் வசம் வந்துவிடும் என்று திமுக தலைமை உறுதியான நம்பிக்கையில் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று அமைச்சர்கள் யாரென்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த விதத்தில், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி திமுக வேட்ப்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம் அவரை எதிர்த்து போட்டியிட்டது பாஜக அதனால் அவர் சுலபமாக வென்றுவிடுவார் என சொல்லப்படுகிறது.