திமுக ஸ்டாலின் ரகசிய பொதுக்கூட்டம்! மண்டபம் சீல் வைத்ததன் நோக்கம்! கலவரத்தை தூண்டவா? அமைச்சர் பேச்சு!

Photo of author

By Parthipan K

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது.

அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் EPS OPS என அனைவரும் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தை, சட்டம் ஒழுங்கு கலவரத்தை உருவாக்கி ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் வேலூரில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்திற்காக வேலூர் வந்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட அமைப்பினருடன் ஆலோசனை நடத்துவதற்கு உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டியது தானே எனவும், அவ்வாறு உள்ளரங்கில் ரகசியமாக ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். 

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தை கூட்டிய மண்டபத்திற்கு அரசு தரப்பில் சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்