கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.இது குறித்து அவர் மீது புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் ஜாமின் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் இவரது ஜாமீன் மனு ஆனது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஜார்கண்ட் முதலமைச்சருக்கு ஜாமின் வழங்கியதை முன்வைத்து இவருக்கும் வழங்கும் படி தனது வாதங்களை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். துமட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் இவரது வழக்கை விரைவில் முடிக்கும்படி அறிவுறுத்தியது. இப்படியே இவரது ஜாமினானது தள்ளிப் போய்க் கொண்டிருந்த வேளையில் தற்பொழுது நிபந்தனைகளுடைய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இதில் அவர் வாரத்தில் இரு முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.மேலும் இவருக்கு இருவர் ரூ 25 லட்சத்துக்கு உத்திரவாதம் கொடுப்பதோடு இவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்களை கலைக்க முயல கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.